சென்னை:

மிழகத்தில்,  10வது மற்றும் 12-வது வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்களுக்கு  அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக தமிழக சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தமிழ்வழி கல்வி படிப்போருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் வழக்கப்படும் சட்டதிருத்தம் ஏற்கனவே உள்ளது. இதில், தற்போது சிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இன்றைய சபை நடவடிக்கையின்போது, 10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல்  செய்து உரையாற்றினார்.

அப்போது, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளும் தமிழ் வழியில் படித்திருந்தாலும்,  டிஎன்பிஎஸ்சி உள்பட அரசுப்பணியில் 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற முடியும்.