சண்டிகர்: அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா பரிசோதனை செய்த போது, எனக்கு தொற்று இருப்பது உறுதியானது.
ஆனாலும், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை. இருந்தாலும் நான் என்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டேன் என்று கூறி உள்ளார்.
முன்னதாக, அரியானா முதலமைச்சர் எம். எல் கட்டார், அமைச்சர்கள், சட்டமன்ற தலைவர் கியான் சந்த் குப்தா, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.