காந்தி நகர்,
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து கடந்த வாரம் முதல்வர் ரூபானி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது.
இந்நிலையில் முதல்வருக்கும், துணைமுதல்வர் நிதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
துணைமுதல்வருக்கு பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசடை தோ்தலில் பா.ஜ.க. அரசு 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 182 இடங்களில் 99 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.க. ஆறாவது முறையாக, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
இந்நிலையில் கடந்த 22ந்தேதி குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் உள்பட 20 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது துணைமுதல்வராக இருக்கும் நிதின் பட்டேல் நிதித்துறையை நிர்வகித்து வந்தார். ஆனால், தற்போது அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட வில்லை.
இதன் காரணமாக அதிருப்தியில்உ ள்ள துணை நிதின் பட்டேல், தனது துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு நிதித்துறைக்கு பதில் வேறு துறை ஒதுக்குவதாக கூறப்பட்ட நிலையில் அதை ஏற்க மறுத்த நிதின் பட்டேல், தனக்கு நிதித்துறை ஒதுக்காதது தன்னை அவமானப்படுத்துவதாக கூறி, அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றால்போல அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும் நிதின் பட்டேல் ஏற்க மறுத்துவிட்டார். நிதின் பட்டேலுக்கு 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் எந்நேரமும் பாஜகவில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ள படேல் இன தலைவர் ஹர்திக் படேல் நிதின் பட்டேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக மதிக்கவில்லை என்றால் நிதின் பட்டேல் கட்சியை விட்டு வெளியே வருவது நல்லது. நிதின் பட்டேலுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளியே வர தயாராக உள்ளனர்.
அவர் வெளியே வந்தால், காங்கிரஸ் கட்சியுடன் பேசி நல்ல நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று கூறி உள்ளார்.
ஹர்திக் பட்டேல் கூறுவதுபோல நிதின் தனது ஆதரவாளர்களுடன் பாஜவை விட்டு வெளியே வந்துவிட்டால் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி பதவி ஏற்ற ஒரு வாரத்திலேயே கவிழ்ந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
இதன் காரணமாக குஜராத் பாஜகவில் பரபரப்பு நிலவி வருகிறது.