ஹரிஷ் கல்யாண் திருமண ஆல்பம் சிம்பு மிஸ்ஸிங்…
நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் திருமணம் இன்று சென்னையில் நடந்தது.
உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முக்கிய திரைப்பட பிரபலங்கள் மட்டும் அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்ச்சி திருவேற்காட்டில் நடைபெற்றது.
பிந்து மாதவி, இந்துஜா, அதுல்யா ரவி உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர்.
முக்கிய விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருமண வீட்டாரே இதுதொடர்பான படங்களை பகிர்ந்தனர்.
ஹரிஷ் கல்யாண் – நர்மதா திருமண புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் சிம்புவை மட்டும் காணவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.