மும்பை:
பிரதமர் மோடியை மீண்டும் குஜராத்துக்கு திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது என ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இணைந்த ஹர்திக் பட்டேல், மும்பையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நானும் காவல் காரன் என்ற பாஜகவினரின் பிரச்சாரம் குறித்து பேசிய அவர், “காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரச்சினையை அதிகரித்துள்ளனரே தவிர, பிரச்சினையை தீர்க்க இவர்கள் ஒன்றும் செய்யவில்லை” என்றார்.
இந்திய இளைஞர்கள் பாஜக மீது கோபமாக இருப்பதாக தெரிவித்த அவர், “பிரதமர் மோடியை குஜராத்துக்கு அனுப்ப அவர்கள் தயாராகிவிட்டதாக” தெரிவித்தார்.
“நான் காவல்காரன், எனக்கு வாக்களியுங்கள் என்று இந்த உலகில் யாராவது சொல்ல கேட்டிருப்போமா? என்று கேள்வி எழுப்பிய ஹர்திக் பட்டேல்,”ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சார போஸ்டரில் போடுகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.