கமதாபாத்

ற்போது காங்கிரஸில் இணைந்துள்ள படேல் இன தலைவர் ஹர்திக் படேல் தனது டிவிட்டர் பெயரை வேலைவாய்ப்பற்ற ஹர்திக் படேல் என மாற்றிக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து “காவலரே திருடன் ஆனார்” என விமர்சித்து வந்தார். அதனால் பிரதமர் மோடி டிவிட்டரில் #நானும்காவல்காரன் என்னும் ஹேஷ்டாக்கை டிரண்ட் ஆக்கினார். அதை ஒட்டி அவர் தனது பெயருடன் காவல்காரன் (சௌக்கிதார்) என சேர்த்துக் கொண்டார். இந்த பெயர் மிகவும் பிரபலமானது.

மோடியின் வேண்டுகோளுக்கிணங்க பாஜக தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் அனுதாபிகள் உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் காவல்காரன் என்னும் பொருள் வரும் படி சௌக்கிதார் என மாற்றிக் கொண்டுள்ளனர். இது குறித்து காங்கிரசார் பல விதத்தில் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரசில் சமீபத்தில் இணைந்த படேல் இனத் தலைவரான ஹர்திக் படேல் தனது டிவிட்டரில் பிரோஜ்கார் ஹர்திக் படேல் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். பிரோஜ்கார் என்றால் வேலை வாய்ப்பற்ற என பொருள் ஆகும். அதை ஒட்டி குஜராத் காங்கிரஸ் ஐடி குழுவின் துணைத் தலைவர் ஹிரன் பங்கர் தனது பெயருடன் பிரோஜ்கார் என சேர்ந்துக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் பாஜக சௌக்கிதார் என்பதை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது போல காங்கிரஸ் பிரோஜ்கார் என்னும் வார்த்தையை அங்கீகரிக்கவிலை. இவ்வாறு மேலும் பல காங்கிரஸ் இளைஞர்கள் டிவிட்டரில் பெயர் மார்றம் செய்துக் கொண்டுள்ளனர். இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைமையிடம் அனுமதி கோரி உள்ளதாகவும் விரைவில் அது கிடைக்கும் எனவும்  பங்கர் தெரிவித்துள்ளார்.