டோதரா

ஸ்திரேலிய அணியில் இருந்து விலக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காபி வித் கரண் என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்டனர். அப்போது இருவரும் பெண்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கலை தெரிவித்ததாக புகார் எழுந்தது.

அதை ஒட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இருவரும் இனி ஆஸ்திரேலிய போட்டிகளில் விளையாடக் கூடாது எனவும் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்புமாறும் உத்தரவிட்டது. அதன்படி இருவரும் இந்தியா திரும்பினர். இந்தியா திரும்பிய பிறகு ஹர்திக் பாண்டியா வடோதராவில் உள்ள அவர் வீட்டுக்குளேயே இருக்கிறார். வெளியில் எங்கும் வராத அவர் தொலைபேசி அழைப்புக்களையும் ஏற்பதில்லை.

இது குறித்து ஹர்திக் பாண்டியவின் தந்தை ஹிமான்ஷூ, “ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியபிறகு வீட்டை விட்டு வெளியே செல்வதே கிடையாது. வரும் தொலைபேசி அழைப்புக்களையும் அவர் எடுப்பதில்லை. முழுக்க ஓய்வு எடுத்து வரும் ஹர்திக் அடிலெய்ட் போட்டியை வீட்டில் இருந்தபடி பார்த்தார்.

மகா சங்கராந்தியை ஒட்டி குஜராத்தில் அனைவரும் பட்டம் விடுவர்கள். வழக்கமாக விரும்பி பட்டம் விடும் ஹர்திக் இம்முறை பட்டம் விடவில்லை. எந்த விழாவிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. வீட்டிலும் யாரிடமும் அவர் அதிகம் பேசவே இல்லை.

அதனால் ஹர்திக்கின் சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களாகிய நாங்கள் அவரிடம் எதுவும் இது குறித்து பேசவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதிக்கும் என தெரிகிறது. அந்த முடிவுக்காக காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.