200 கோடி ரூபா படம். ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங்.
தெலுங்கு திரைப்பட உலகில் டாப் ஸ்டார் ஆக ஒரு காலத்தில் திகழ்ந்த மோகன் பாபு, பெரும்பாலான ஸ்டார் தந்தைகளைப் போலவே தனது வாரிசையும் திரையுலகில் முன்னணி நடிகராக நிலை நிறுத்த போராடி வருகிறார்.

இதற்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தனது மகன் மஞ்சு விஷ்ணுவை கதாநாயகனாக போட்டு கண்ணப்பா என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
வசூலில் எந்த சேதாரமும் இருக்கக் கூடாது என்பதற்காக இதை ஒரு Pan- india படமாகவும் அவர் தயாரிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகர் பிரபாஸ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நம்மூர் சரத்குமார் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம்.
இது தவிர முதன்முறையாக தெலுங்கில் கால் வைக்கிறார், நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 2.0 வில் வில்லனாக நடித்த இந்தி ஸ்டார் அக்சய் குமார்.
முதன்முறையாக கண்ணப்பா படத்தின் மூலம் தெலுங்கில் அவர் கால் பதிக்கிறார்.
இப்படி பிரம்மாண்டங்களுடன் தயாராகி வரும் கண்ணப்பா திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பு படத்துக்கு வந்திருப்பதோ பெரும் சோதனை.
இந்தப் படத்திற்கான விசுவல் எபெக்ட் காட்சிகள் (VFX) மும்பையில் உள்ள HIVE ஸ்டுடியோ சென்டர் நிறுவனத்தில் தயாராகின.
படத்தின் உயிர்நாடியே இந்த 90 நிமிட வி எப் எக்ஸ் காட்சிகள் தான் என்கின்றனர்.
இப்படிப்பட்ட விஎஸ் அடங்கிய ஹார்ட் டிஸ்க் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு டிடிடிசி கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று டெலிவரி செய்யப்பட்ட இந்த பார்சலை வாங்கியவர்கள் பட தயாரிப்பு நிறுவனத்தின் ஆபீஸ் பாய் ரகு என்பவர். இன்னொரு ஊழியர் ஆன சரிதா என்பவரிடம் பார்சலை ஒப்படைத்து இருக்கிறார்.

அதன் பிறகு பிரச்சனை என்னவென்றால், ரகுவையும் காணவில்லை, சரிதாவையும் காணவில்லை.
அதைவிட 200 கோடி ரூபாய் பட்ஜெட் படமான கண்ணப்பாவின் 90 நிமிட ஹார்ட் டிஸ்கே மிஸ்ஸிங்.
கலகலப்பு போயிருக்கும் கண்ணப்பா படம் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் சரிதாவையும் ரகுவையும் வைத்து 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகளை கடத்தி அவற்றை இணையதளத்தில் வெளியிட்டு கண்ணப்பா படத்திற்கு டேமேஜ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்கிறது தயாரிப்பாளர் மோகன் பாபு தரப்பு.
அப்படி இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும் அதனை யாரும் ஊக்குவிக்க வேண்டாம் என்றும் கைகூப்பி வணங்குகிறது கண்ணப்பா படத் தரப்பு.
200 கோடி ரூபாய் பட்ஜெட் படத்துக்கு இப்படியும் ஒரு வில்லங்கம்!
ரகுவும் சரிதாவும் எங்கே? அவர்கள் சிக்கிய பிறகுதான் ஹார்ட் டிஸ்கின் கதி பற்றி தெரியவரும் போல..
– செய்திப்பிரிவு