சண்டிகர்: பிரபல தேர்தல் சூத்திரதாரி (சாணக்கியன்) கருதப்படுப்பவருமான,  தேர்தல் வியூகம் வகுப்பாளரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஐபேக் எனப்படும் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள  பிரசாந்த் கிஷோர்  பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங்  தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநில அரசுகளின் வெற்றிக்கு அச்சாரமிட்டவர் தேர்தல் சாணக்கியனான பிரசாந்த் கிஷோர். இவரது ஆலோசனையின்பேரில்தான் கடந்த 2019 ஆண்டு  நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி அமோகமாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்ததார். கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றினார். அந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.  அதைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து வருகிறார். அதுபோல, மேற்குவங்க மாநிலத்தில், மம்தாவின் அரசுக்கும் பிரசாந்த் கிஷோர்தான் ஆலோசனை வழங்கி வருகிறார்.  பல மாநிலங்களில், குறிப்பாக பல கட்சிகள்,பல கூட்டணிகள் கொண்ட மாநிலங்களில் மிகச் சரியான கூட்டணியை உருவாக்கி, அசாத்திய வெற்றிகளை சாத்தியமாக்க உதவியுள்ளர்.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரை பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங், தனது முதன்மை ஆலோசகராக நியமித்து உள்ளார். இதை அவர் தனது டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். மேலும், பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.