ஆக்லாந்து:  உலகிலேயே புத்தாண்டு முதன்முதலாக நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக பிறந்ததுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வான வேடிக்கைகளுடன் 2002ம்  புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

2021 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்று. இன்னும் 6மணி நேரத்தில் இந்த ஆண்டு முடிவடைந்து, புத்தாண்டு பிறக்க உள்ளது.  நள்ளிரவு 12.01 மணிக்கு 2022 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது.

உலக அமைப்பின்படி, புத்தாண்டு பிறப்பு நியூசிலாந்து நாட்டில் முதன்முதலாக காணப்படுகிறது.  உலக நேரக் கணக்கின்படி முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி அளவில்  பிறந்தது.

புத்தாண்டு பிறப்பையொட்டி,  நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வண்ணமயமான வானவேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.  இதை பொதுமக்களும் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடன் கொண்டாடி, புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து  மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.