சென்னை: சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 5வது பிறந்தநாள்.  அவரது பிறந்தநாளை திமுகவினரும்  கனிமொழியின் ஆதரவாளர்களும்  நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கனிமொழிக்கு அவரது சகோதரரும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருஐகின்றனர். மேலும்,  கூட்டணி கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  “எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் திடீர் வாழ்த்து அரசியல் கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.