பீஜிங்:
சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வுகானில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை மூடப்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் சீனாவின் வுகான், ஹுபேய் மாநிலங்கள் தனிமைப்படுத்தப்பட்டது. மொத்தம் 1 லட்சம் பேருக்கு மேல் பாதிப்படைந்த நிலையில், 200 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க சீனா சுகாதாரத்துறை எடுத்த முன்னேற்பாடுகள் மற்றும், நடவடிக்கை காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வுகான் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட கடைசி தற்காலிக மருத்துவ மனை, நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அந்நாட்டு மக்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் சந்தோசத்துடன் பகிர்ந்து வருகின்றனர்..
இதுகுறித்து தெரிவத்துள்ள சீனாவின் பொது சுகாதாரத் துறை , இது மக்களிடையே மகிழ்ச்சியை அளித்தாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.