சென்னை: ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டிசேலைகளை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பொங்கலையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி,  2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு,  நெசவாளர்கள் மூலம் கைத்தறி வேட்டி, சேலை நெசவு பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாகவும்,  ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டிசேலைகளை அனுப்ப வேண்டும் என்று  கைத்தறித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மக்களுக்கு பொங்கலையொட்டி, இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.    அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 2025-ம் ஆண்டிற்காக 1 கோடியே77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இலவச, வேட்டி சேலைகளை ஜனவரி.10-ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தி உள்ளது. 2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது.