பிரிட்டனில் ஹேண்ட் சானிடைசர் (கை சுத்திகரிப்பான்) விற்பனை 255% அதிகரிப்பு

Must read

ண்டன்

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாகப் பிரிட்டனில் கை சுத்திகரிப்பான் விற்பனை 225% அதிகரித்துள்ளது.

பொதுவாக கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்.   இதன் மூலம் நோய்த் தொற்று உண்டாவதைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.  இவ்வாறு கை கழுவுவதற்கு லிக்விட் சோப் எனப்படும் நீர் சோப்புக்கள் பயன்படுத்தப் படுகின்றன.   அத்துடன் கைகளைச் சுத்தம் செய்ய ஹேண்ட் சானிடைசர் என்னும் கை சுத்திகரிப்பான் தற்போது பயன்படுத்தப் படுகின்றன.

நீர் வசதி இல்லாத இடங்களில் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுவது முடியாத காரியம் ஆகும்.    அத்துடன் ஒரு சில நேரங்களில் கை சுத்தமாக இருப்பதுடன் ஈரமின்றி இருப்பதும்  முக்கியமாகும்.   அந்த வேளைகளில் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தப்படுகிறது.   இதில் ஓரிரு சொட்டுக்கள் இரு கைகளிலும் விட்டு தேய்த்தால் போதுமானது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தற்போது சுகாதார விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.  கை சுத்திகரிப்பான் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது.  பிரிட்டனில் கடந்த 4 வாரங்களில் கை சுத்திகரிப்பான் விற்பனை மிகவும் உயர்ந்துள்ளது.  இது சென்ற வருடம் இதே காலகட்டத்தைப் போல் 225% ஆகும்.

அத்துடன் நீர் சோப்பு விற்பனை ஒரே வாரத்தில் 7 % அதிகரித்துள்ளது.  அதைப் போல் தரை மற்றும் வீடு சுத்தம் செய்யும் பொருட்களின் விற்பனையும் 105 அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article