டெல்லி:
இந்திய நீதிமன்றங்களில் நடமாடும் வக்கீல்கள் 50 சதவீதம் பேர் போலி என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இது என்றும், தற்போது நடந்து வரும் கணக்கெடுப்பில் 55 முதல் 60 சதவீத உண்மையான வக்கீல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
55 முதல் 60 சதவீத போலி வக்கீல்கள் இந்திய நீதிமன்றங்களில் உலா வருவதாக கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையில் மூத்த நீதிபதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா இதை அறிவித்தார்.
2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்காளர்கள் பார் கவுன்சிலில் இருந்தனர். ஆனால் தற்போது நடந்து வரும் பரிசீலனைக்கு 6.5 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. இவர்கள் அந்தந்த மாநில பார் கவுன்சிலங்களில் பதிவு செய்து நீதிமன்றங்களில் பணியாற்றி வருகின்றனர்.
சாதாரண பிரச்னைகளுக்காக போராட்டம் என்ற பெயரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதற்கு இந்த போலி வக்கீல்கள் தான் காரணமாக உள்ளனர். கவுன்சில் சான்றிதழ் மற்றும் பணியாற்றி வரும் இடத்தின் அடிப்படையாக கொண்டு 2105ம் ஆண்டு விதிப்படி பரிசீலனை நடந்து வருகிறது.
நீதிமன்றங்களில் போலி வக்கீல்கள் நடமாட்டம், பணியாற்றாத வக்கீல்கள், சமூக விரோதிகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பார் கவுன்சிலர் தலைவர் தெரிவித்துள்ளார். போலி சட்ட பட்டம் என்பது 3 வகையாக உள்ளது. பல வருடங்களுக்கு முன் சான்றிதழ் காணாமல் போய்விட்டது.
கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறி கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். போலி சட்ட படிப்பு சான்றிதழ். உச்சநீதிமன்ற அனுமதிக்காத திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுநிலை சட்டப்படிப்பை முடித்தவர்கள். இது போன்ற போலிகள் நடமாட்டம் தான் அதிகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.