
பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் சிமோனா ஹாலெப் மற்றும் அஸரன்கா.
ருமேனியாவின் ஹாலெப், சமீபத்தில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒன்றையர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அஸரன்கா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் தொடரின் முதல் சுற்றில் இருவரும் பங்கேற்றனர். ஹாலெப் தனது முதல் சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் சாரா டர்மோவை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெலாரஸ் நாட்டின் அஸரன்கா, மான்டினேக்ரோவின் டான்காவை எதிர்த்து ஆடி வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த பிரெஞ்சு ஓபன் தொடர், சிமோனா ஹாலெப் மற்றும் பெலாரசின் அஸரன்கா ஆகிய இருவரிடைய பெரிய போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]