பெங்களூரு: ராமர் கோயில் கட்ட நன்கொடை தராதவர்களின் வீடுகள்அடையாளமிடப்படுகிறது; இது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துகிறது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சியினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். மேலும், ராமர்கோவில் கட்டுமானப் பணி அறக்கட்டளையான, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையும் நிதிகளை வசூலித்துவருகிறது. இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வசூலாகி உள்ளது.
இந்த நிலையில், ராமர்கோவில் அறக்களை உறுப்பினரும், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்திபெற்ற பெஜாவர் மடத்தின் மடாதிபதியுமான விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி உடுப்பிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், ராமர்கோவில் கட்டுமானப்பணிக்கு இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ராமர்கோவில் கட்ட அனைத்து தரப்பினரும் தாராளமான நன்கொடை வழங்கி வருகின்றனர்.. இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது என தெரிவித்தார்.
இநத் நிலையில், கர்நாடக மாநிலம் சிவபோகாவில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுவது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நிதி திரட்டுவதாகவும், நிதி கொடுத்தவர்களின் வீடுகள் தனியாக அடையாளமிடப்பட்டு வருவதாகவும், நிதி தராதவர்களின் வீடுகளின் பெயரை தனயாக எழுதுகிறார்கள் அது என்றும், ஏன் என தெரியவில்லை என்றவர், இது ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சியில் என்ன நடந்ததோ அதே போன்று தான் இங்கும் நடப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த போக்கானது, நம்மை இறுதியாக எங்கு அழைத்து செல்லும் என்பது எனக்கு தெரியாது. இந்த தேசம் அறிவிக்கப்படாத அவசர நிலையின் கீழ் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
[youtube-feed feed=1]