H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு எடுப்பது கடினமாகியுள்ளது. மேலும், H-1B மற்றும் L-1 விசாக்களில் விதிகளை கடுமையாக்கும் மசோதாவும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இந்தியாவுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (global capability centres – GCC) நிதி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரிய பங்கு வகிக்கின்றன.

ஏற்கனவே இந்தியாவில் 1,700-க்கும் மேற்பட்ட GCC-கள் உள்ளன.

2030க்குள் இது 2,200-க்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொழில்நுட்ப திறமை அதிகம் உள்ளதால் GCC-கள் நெகிழ்வான மையங்களாக அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுகின்றன.

AI, சைபர் பாதுகாப்பு, தயாரிப்பு மேம்பாடு போன்ற துறைகளில் முக்கிய வேலைகளை இந்தியாவில் மேற்கொள்ள இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன இதனால் குடியேற்ற கட்டுப்பாடுகளைத் தவிர்த்து வேலைகளை நிறைவேற்ற முடிகிறது.

இருந்தபோதும், புதிய HIRE சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்கா வெளிநாடுகளில் செய்யும் வேலைகளுக்கு 25% வரி விதிக்கலாம்.

இது இந்தியாவின் சேவை ஏற்றுமதியை பாதிக்கக்கூடும். இந்திய IT துறை ($283 பில்லியன் மதிப்புள்ள) அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

அதே நேரத்தில், GCC-களின் தேவை அதிகரித்து வருவதால் H-1B விசா சார்ந்த வருவாய் குறைந்தாலும், GCC சேவைகள் மூலம் ஈடு செய்யலாம்.

இதனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேலும் வேலைகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.