ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். இதனை அறிமுக இயக்குநர் கெளசிக் ராமலிங்கம் இயக்கி வருகிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் ஜி.வி.பிரகாஷ் உடன் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நாயகி மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. ரூபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக ஷரவான் சரவணன் மற்றும் எடிட்டராக ஜிஜேந்திரன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.