சென்னையில் கூர்க்கா இன மக்கள் ஆர்ப்பாட்டம்!

Must read

சென்னை:

மேற்கு வங்காளத்தில் கூர்க்கா இன மக்கள் தனி மாநிலம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் கூர்க்கா இன மக்கள்  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேற்குவங்காளத்தில் கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழும் பகுதியை பிரிந்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலத்தை அமைக்க கோரி, தமிழகத்தில் வசித்து வரும் கூர்க்கா இன மக்கள்  சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில்,  கூர்க்க்கா இன மக்கள் தனி மாநிலம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்க மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கூர்க்கா இன மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங்கில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் வாகனங்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடுநடத்தினர்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் கூர்க்கா இன மக்கள், தங்களுக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது  வங்க மொழி திணிப்பிற்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார்.

More articles

Latest article