குண்டூர்

குண்டூர் நீதிமன்றம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது/

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தர்போதைய ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், 30,000 மைனர் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போனதற்கு அப்போது ஜெகன்மோகன் ஆட்சியில், மக்கள் சேவைக்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள்தான் காரணம் என்று கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் அவர் மீது முந்தைய அரசு வழக்கு பதிவு செய்தது.  ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தற்போது அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என முந்தைய ஆட்சியில் தன்னார்வலராக இருந்த ஜடா ஷ்ரவன் குமார் என்பவர் குண்டூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட குண்டூர் நீதிமன்றம், பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.