கட்சினா:
நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி நுழைந்த மர்மநபர்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.

மேலும் பலரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதில் கிராமமக்கள் உதவியுடன் சிலர் மீட்கப்பட்டனர்.