
யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்தவர்கள் துயரங்களைக் கேட்டறிந்த கமல் கண்கலங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பலியான உயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் ஈடாகாது. யாரையோ திருப்திப்படுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel