பீட்டர்ஸ்பெர்க், அமெரிக்கா

மெரிக்க நாட்டு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது/

அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.  இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் துப்பாக்கி சூடு நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.   இது குறித்து அம்மாநில போலிசார் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் “பல்கலைக் கழக வளாகத்தினுள் துப்பாக்கி சூடு நிகழ்ந்ததால் அந்தப் பகுதிக்கு மக்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் “ஒரு கருப்பின  வெள்ளை நிற மேலங்கி (JERSY) அணிந்த ஆண் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உள்ளார்.  இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள் எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.  ஆனால் நடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.   போலீசார் எந்த ஒரு விவரமும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.   இந்த பகுதியே பரபரப்புடன் திகழ்கிறது” எனக் கூறியுள்ளார்.

தற்போது போலீசார், “அந்தப் வளாகம் முழுவதுமாக மூடப்பட்டு விட்டது.  பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” எனக் கேடுக் கொண்டுள்ளது.

இன்னும் முழுமையான விவரங்கள் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.