துபாய்:
ஓமன் சுல்தான் குவாபூஸ் பின் (Sultan bin Qaboos ) சையத் காலமானார் அவருக்கு வயது 79. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குவாபூஸ் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானாதாக கூறப்படுகிறது. இதை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஓமன் நாட்டு சுல்தானாக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் பின் குவாபூஸ்.பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் ஒரு தனித்துவமான மத்தியஸ்தர், தொலைநோக்கு பார்வை கொண்ட குவாபூஸ், நாடுகளுக்கு இடையே பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தைள் நடத்தி அமைதிக்கு வழி வகுத்தவர்.
கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே இரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் பின் குவாபூஸ் பின்-னுக்கு எந்த வித வாரிசும் கிடையாது. இந்த நிலையில், அவரது மறைவால் நாட்டின் மன்னர் பதவி காலியாக உள்ளது. அவரது இடத்தில் அடுத்து பதவிக்கு வரப்போவது யார் என்று உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.து ஆட்சி நிர்வாகம்ஆலோசித்து வருகிறது.
passed away