கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் மோசடி வழக்கை விசாரிக்கும் சைபைர் கிரைம் காவல்துறையினர் 1100 க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்களைக் கைப்பற்றி உள்ளனர்.

கடந்த 2018 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் ரேஷ்ன் பொருட்கள் பெருமளவில் மோசடி செய்யப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   குஜராத் மாநிலத்தில் கடந்த 7 வருடங்களாக விரல் ரேகை மூலம் மட்டுமே நியாய விலைக்கடைகளில் ரேஷன்  பொருட்கள் அளிக்கப்படுகின்றன.  எனவே இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் காவல்துறை  விசாரிக்க ஆணை இடப்பட்டது.

இதையொட்டி நடந்த விசாரணையில் குஜராத் மாநில நியாய விலைக் கடை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள விரல் ரேகை அடையாள விவரங்களைச் சட்ட விரோதமாக வெளியாருக்கு அளித்து அதைப் போல் அச்சுக்கள் செய்துள்ளது கண்டு பிடிக்கபட்டது.  இதன் மூலம் பயனாளிகளின் போலி கை ரேகை அச்சு செய்யப்ட்டு அதன் மூலம் ரேஷன் பொருட்கள் மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

இந்து குறித்து நடந்த விசாரணையில்  இந்த கை ரேகை விவரங்கள் சில தனியாருக்கு விற்பனை நடந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.    இவ்வாறு சுமார் 1.27 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் ரேகை விவரங்கள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.    அத்துடன் சூரத் நகரில் ஒரு நியாய விலைக்கடையில் 1100க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்கள் கிடைத்துள்ளன.

போலி ரேகை அச்சு குறித்து ஏற்கனவே மும்பை தடவியல் அதிகாரி ஜூட் டிசோஸா  எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவு கோரத்தக்கதாகும்.   டிசோஸா, “விரல் ரேகை அச்சுக்கள் மூலம் எந்த ஒரு பயோ மெட்ரிக் சாதனத்தையும் இயக்க முடியும்.   இதன் மூலம் ரேஷன் மட்டுமின்றி ரேகை மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனைகள்,  ரேகை மூலம் திறக்கும் பூட்டுக்கள், சிம் கார்ட் விற்பனை உள்ளிட்ட பலவற்றையும் நடத்த முடியும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.