அகமதாபாத்:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய வாகன சட்டத்திருத்தத்தின்படி, விதிமீறல் குற்றச்சாட்டு களுக்கான அபராதம்  பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு, அபராத கட்டணங்களை பாதியாக குறைத்து உள்ளது.

இந்த மாதம் (செப்டம்பர் 1, 2019) 1ந்தேதி முதல் நாடு முழுவதும் புதிய வாகன சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,  வாகன கட்டணங்கள், காப்பீடு கட்டணங்கள், விதி மீறல்களுக்கான அபராதத் தொகைகள் போன்றவை  பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து காவல்துறை யினர் விதிகள் மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி, வசூல் செய்து வருவது பொதுமக்களிடையே கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் காவல்துறை யினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் குடித்திருந்தாக கூறி ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்க, அவர் வாகனத்தை நடுரோட்டிலேயே தீ வைத்து கொளுத்து விட்டார். அதுபோல லுங்கி அணிந்து கனரக வாகனத்தை இயக்கிய ஓட்டுனருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்களால், பல இடங்களில் பிரச்சினை எழுந்து வரும் நிலையில், கேரள மாநில அரசு புதிய போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.. ந்த நிலையில், குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு எதிராக  புதிய வாகன சட்டத்தின்படி வசூலிக்கப்படும் அபராதத் தொகையை பாதியாக குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, மத்தியஅரசு சட்டப்படி, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.ஆயிரத்தை ரூ.ஐநூறாக குறைத்து உள்ளது. மேலும், வாகன லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.5 ஆயிரத்தை ரூ.2 ஆயிரமாக குறைத்து உள்ளது. இதுபோன்று அனைத்து அபராத கட்டணங்களையும் பாதியாக குறைத்து உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில பாஜக அரசு புதிஅபராத தொகையினை குறைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.