காந்திநகர் :
குஜராத் அமைச்சர் சங்கர் சவுத்ரி, பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் நடத்திய போது எடுத்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநில நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்பநலம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சங்கர் சவுத்ரி. இவர் அங்குள்ள திஷா பகுதியில், அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்த முனஐந்தார் சங்கர் சவுத்ரி. கரும்பலகையில் E-L-E-P-H-A-N-T என்பதற்கு பதிலாக E-L-E-P-H-E-N-T என எழுதியுள்ளார்.
அதாவது A என்பதற்கு பதிலாக E என்று எழுதினார். இதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிய இப்போது இந்த படம் வைரலாக பரவி வருகிறது.
இவர் மீது ஏற்கெனவே சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த குற்றச்சாட்டும், போலியாக எம்.பி.ஏ., பட்டம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.