அகமதாபாத்: குஜராத்தில் உள்ள பிரபலமான சொகுசு விடுதியில் மது விருதுந்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக, சொகுசு விடுதிகளிலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பஞ்ச்மஹால் காவல் எல்லைக்கு உட்பட்ட சொகுசு விடுதி விதிகளை மீறி மதுவிருந்து, சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், திடீர் சோதனை நடத்தினர். இதில், இளம்பெண்களுடன் மதுவிருந்து ஒருபுறமும், மற்றொரு புறம் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரையும் சுற்றி வளைத்த காவல்துறையினர், மொத்தமா கைது செய்தனர். விசாரணையில், மதுவிருந்துடன் சூதாட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பாஜக எம்எல்ஏ கேசரிசின் சோலங்கி என்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 25 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து,6 லட்சம் ரூபாய் பணம், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.