கமதாபாத்

சோக சக்கர விருது பெற்ற வீரர்களுக்கு குஜராத் அரசு மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவான உதவித் தொகைகளை அளித்து வருகிறது.

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாடெங்கும் உள்ள பலரும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். அது மட்டுமின்றி பொதுவாகவே விருது பெற்ற பல படை வீரர்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் பெருமளவில் ரொக்கப்பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகின்றன.

இந்நிலையில் அசோக சக்கர விருதுகள் பெற்றுள்ள வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அளிக்கும் மாநிலங்களில் குஜராத் மாநிலம் மட்டுமே மிகக் குறைந்த அளவில் பணம் வழங்குவதாக குஜராத் முன்னணி நாளேடான அகமதாபாத் மிரர் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் விருதுகள் பெற்ற வீரர்களுக்கு ரூ. 20000 ரொக்கப் பரிசு வழங்கி உள்ளதாகவும் அரியானா மாநில அரசு ரூ1 கோடி அளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

அகமதாபாத் மிரர் ஊடகம் ”இவ்வாறு கடந்த 33 வருடங்களாகவே குஜராத் அரசு மிகவும் குறைந்த பரிசுத் தொகையை வீரர்களுக்கு அளித்து வருகிறது. மிக உயரிய ராணுவ விருதான பரம் விர் சக்ரா விருதைப் பெற்ற வீரருக்கு ஒரு முறை உதவியாக ரூ22500 அளித்து விட்டு மாதம் ரூ.500 உதவித் தொகை கடந்த 30 வருடங்களாக அரசால் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த தொகை ரூ.15000 ஆக அ1986 வரை இருந்துள்ளது.

ராணுவ விருதுகளான அசோக சக்கர விருது பெற்றோருக்கு ரூ.20000, சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் பெற்றோருக்கு ரூ.17000, மகாவீர் சக்கர விருதுக்கு ரூ.12000, உத்தம் யுத் சேவா பதக்கம் பெற்றோருக்கு ரூ.10000, சௌரிய சக்கர விருது பெற்றோருக்கு ரு5000 மற்றும் யுத் சேவா பதக்கம் பெற்றோருக்கு ரூ.4000 என்னும் விகிதத்தில் உதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இது குஜராத் மாநில அரசின் அவமானகரமான கஞ்சத்தனமான செயலாகும்” என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.