டில்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் குறைந்த நாட்களே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாக, கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்க இருப்பதால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை குறைவான நாட்களே நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் கூறுகையில், குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் வரை மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.