அகமதாபாத்
நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிய்வில்லை
சமீபத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில்,
‘எனக்கு தெரிந்த குஜராத் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் தேர்வில் அந்த மாணவி 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.”
என அவர் கூறியிருந்தார்.
இதைப் போல் மற்றொரு சம்பவம் அதே குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர் ஜூன் மாதம் நடந்த மறு தேர்வை எழுதினார். இந்த தேர்வில் வேதியியல் பாடத்தில் மட்டுமே தேர்ச்சி். இயற்பியலில் தோல்வி அடைந்தார்.
எனவே குஜராத் மாணவி நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் எடுத்திருந்திருந்தாலும் தற்போது +2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரால் கல்லூரி சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இத்தனை மதிப்பெண் பெற்ற மாணவியால் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாதது மக்களிடையே பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.