காந்திநகர்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்குள்ள உயர் கோபுரம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் பல தீயில் கருகி நாசமாயின.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.