டெல்லி: ரூ.13,500 கோடி பிஎன்பி வங்கி கடன் ‘மோசடி’ வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பங்கிற்காக நாடு கடத்தல் கோரிக்கையின் பேரில், தலைமறைவான நகை வியாபாரி மெஹுல் சோக்ஸி திங்கள்கிழமை பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் தற்போது பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் தனது மனைவி பிரீத்தி சோக்ஸியுடன் ‘ரெசிடென்சி கார்டு’ பெற்ற பிறகு வசித்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விசாரணை அமைப்புகளின் கோரிக்கை அடிப்படையில், ஜாமின் இல்லாத பிரிவுகளில் மெஹுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸியை பிடிக்க மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வநத்து. மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) உள்ளிட்ட இந்திய விசாரணை அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில், மும்பை நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெகுல்ல் சோக்ஷி தனது மனைவியுடன் பெல்ஜியத்தில் வசித்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்தியஅரசு தீவிரமாக இறங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பெல்ஜியம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மெஹுல் சோக்ஸியும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதன் மூலம், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றாலும், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, ரூ.13,500 கோடி மோசடி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் சோக்ஸி, ஏப்ரல் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அவரது கைது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடிக்கு மேல் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த ஊழலில் அவரது மருமகன் நீரவ் மோடியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பெல்ஜியம் நாட்டின், ஆண்ட்வெர்ப்பில் நகரில் வசிப்பதற்கான அனுமதியை பெற்று மெஹுல் சோக்ஸி வாழ்ந்து வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், அவர் பெல்ஜியத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதனை தொடர்ந்து தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.