பெங்களூரு

காங்கிரஸின் 40 எம் எல் ஏ க்கள் தனியாக ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கு பா ஜ க தான் காரணம் என சில எம் எல் ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ராஜ்ய சபை எம் பி தேர்தலை முன்னிட்டு பெரும் பரபரப்பு நிலவுவதும், அதன் காரணமாக 40 எம் எல் ஏக்கள் பெங்களூரு அருகில் உள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட் டில் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

இது குறித்து காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் இதோ

பரேஷ் தனனி : “நாங்கள் இங்கு தங்கியிருப்பதற்கு முழுக்காரணம்,  குஜராத்தில் பா ஜ க நிறைய பணம் கொடுத்து எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கியதும் அரசு இயந்திரத்தைக் கொண்டு சட்ட உறுப்பினர்களை மிரட்டியதும் தான்.  நாங்கள் இங்கு அடைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது தவறு.  நாங்கள் எங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் தொடற்பில் இருக்கிறோம்  முதல்வர் தேவை இல்லாமல் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் விடுமுறையக் கழிப்பதாகவும், குஜராத் வெள்ள நிலவரம் பற்றிக் கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகிறார்.  இதற்கு காரணம் ப ஜ க தான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்”

இதே கருத்தை கியாசுதீன் ஷேக் என்னும் உறுப்பினரும், மற்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.

ரிசார்ட்டில் இவர்கள் கர்நாடகா மாநில காங்கிரசின் விருந்தாளிகளாக தங்கி உள்ளதாக கர்நாடகா காங்கிறஸ் கூறி உள்ளது.  ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ8000 ரிசார்ட் நிர்வாகம் கட்டனம் வசூலிப்பதாக சொல்லப் படுகிறது,  ரிசார்ட்டில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.