கொலையாளி மீட் பட்டேல் – கொலை செய்யப்பட்ட தன்யா பட்டேல்

அகமதாபாத்,

குஜராத்தில் நாடியாட் பகுதியில் 7 வயது சிறுமியை பணத்துக்காக கடத்தி கொலை செய்த பாரதியஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர் அணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு வாழ் தம்பதியினரின் குழந்தையான 7 வயது சிறுமியை, பணத்துக்காக கடத்தி கொலை செய்ததாக பாஜ இளைஞர் அணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தன்று தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமியான தன்யா பட்டேல் என்ற சிறுமியை கடத்திச்சென்று, அவரது வெளிநாட்டு வாழ் பெற்றோரிடம் இருந்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்ட முடிவு செய்துள்ளனர்.

தன்யாவின் பெற்றோர், அமித் படேல், காயத்தி தம்பதியினர் யுகேவில் வசித்து வருகின்றனர். தன்யா தனது பாட்டியுன குஷம் படேலுடன் சாந்த்ராம் நாடியாட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். தன்யாவின்  பெற்றோர் என்ஆர்ஐ ஆக இருப்பதால், அந்த சிறுமியை கடத்தி அதன் மூலம் 25 லட்சத்தை பெற 3 பேரும் முயற்சி செய்தது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட தன்யா அருகிலுள்ள பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வருகிறார்.

இதுகுறித்து, போலீஸ் எஸ்பி மணிந்தர் சிங் பவார் கூறியதாவது,

தன்யா காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டாம். அப்போது அவரை கடத்தியவர்களிடம் இருந்து வந்த போன் கால்களை டிரேஸ் செய்து ஆனந் பகுதியில் ஒருவரை கைது செய்தோம். அவன் மூலம் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்த மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் சம்பவத்தன்று  இரவு 7.45 மணியளவில்  தன்யா விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு கொலைக்குற்றவாளியான  மீட் பட்டேல் சாக்லேட் கொடுத்து  காருக்குள் அழைத்துச்சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றர் அவரது நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்தனர். சிறிது நேரத்தில் தன்யாவுக்கு ஐஸ்கிரிம் வாங்கி கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்த சிறிது நேரத்தில் சிறுமி தன்யா தூக்கியுள்ளார். அப்போது அவளை சாகடித்துள்ள குற்றவாளிகள், அருகிலுள்ள மாகி ஆற்றில் தூக்கி வீசிவிட்டு திரும்பியுள்ளனர்.

அன்று இரவு 8 மணி அளவில் அந்த பகுதியில் பவர் கட் ஏற்பட்டதால், தன்யா காணாமல் போனது குறித்து, அவரது பாட்டி பக்கத்து வீடுகளில் விசாரித்துள்ளனர். பின்னர் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் காணாமல் போனது குறித்து இரவு 10 மணிக்கு புகார் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காணாமல் போன தன்யா குறித்து போலீசார் விசாரணையை முடுக்கினர். சிறுமி காணாமல் போனது குறித்து துப்பு கொடுத்தால் 51ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை ஆனந்த் பகுதியில் உள்ள மாகி ஆற்றில் சிறுமியின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார் அது தன்யா என்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசரணையை தொடர்ந்து குற்றவ்வாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், முதல் குற்றவாளியான மீட் பட்டேல் என்பவர் பாஜவின் இளைஞரணி உறுப்பினராக இருந்து வருகிறார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பேரும் சிறுவர்கள். அதில் ஒருவர் 12ம் வகுப்பு படித்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.