அகமதாபாத்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது மகன் மற்றும் மருமகனின் வ்ருமானத்தை தெரிவிக்க வேண்டும் என குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய முன்னாள் அலுவலக உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். அது குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு அமர்வு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் ரஞ்சன் கோகாய் இடம் பெற்றுள்ளார். அப்போது அவர் அந்த அமர்வின் முன்பு தனது நிலை குறித்து தெரிவித்தார்.
ரஞ்சன் கோகாய், “நான் எவ்வித அப்பழுக்கும் அற்றவன். இந்த புகார் என் மீது ஆதாரம் இல்லாமல் சுமத்தப்படுளது. இதற்கு பின்னால் ஒரு சில பெரிய புள்ளிகள் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த புகாரினால் நான் மிகவும் மனம் உடைந்துள்ளேன். நான் இது குறித்து ஏற்கனவே நான்கு செய்தியாளர்களிடம் பேசி உள்ளேன்.
நான் இதுவரை எந்த ஒரு தவறான செய்கையும் செய்ததில்லை. எனக்கு இருப்பதெல்லாம் எனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.6,80,000 தொகை மட்டுமே ஆகும். நான் 20 வருடங்களாக பணி புரிந்தும் என்னிடம் உள்ள தொகை இவ்வளவு தான். உச்சநீதிமன்ற தாலிமை நீதிபதியால் இவ்வளவு தொகை தான் சேர்க்க முடிந்தது” என தெரிவித்தார்.
இதற்கு குஜராத் பார் அசோசியேஷன் தலைவர் யதின் ஓஜா, “ஐயா தயவு செய்து உங்கள் மகன் மற்றும் மருமகனின் வருமானம் எவ்வளவு என்பதை தெரிவிப்பீர்களா? தங்களுடைய மகன் மற்றும் மருமகனின் வருமானக் கணக்கில் கோடிக்ககணக்கில் வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளனர்..
ஆனால் அதில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட ஒரு நீதிபதியின் வருமானம் இருக்காது என நாங்கள் கூறுகிறோம்.
அவ்வளவு ஏன் நாடெங்கும் உள்ள பல வழக்கறிஞர்களுக்கும் கூட அவர்கள் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட அவ்வளவு வருமானம் இருக்காது. ஆனால் அவர்கள் இருவரும் அதிக அனுபவம் பெறாமலே இவ்வளவு ஊதியம் ஈட்டி உள்ளனர்.” என கடிதம் எழுதி உள்ளார்.