டில்லி,
ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து  நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
1gst
இந்த வரி விதிப்பில் பெண்களின் அத்தியாவசியமான டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின்களுக்கு 12.5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும்  இந்த புதிய முறையில் 1%, 4 %, 12.5%, 20% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. வரி வதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பட்டிய விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை  மத்திய அரசின் நிதி ஆணையர் எச்.கே.குலு அறிவித்து உள்ளார்.

நிதி அமைச்சர் உடன் நிதி ஆணையர் கே.எச்.குலு
நிதி அமைச்சர் உடன் நிதி ஆணையர் கே.எச்.குலு

‘நோ’ வரி
அன்றாடம் உபயோகப்படுத்தும்  விவசாய பொருட்கள், அப்பளம், வடகம், வெற்றிலை, மீன், காய்கறிகள், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், குங்குமம், பொட்டு, முட்டை, தயிர் வெண்ணை, பருத்தி துணி வகைகள், காண்டம், கீரை வகைகள் போன்ற 73 வகையான பொருட்கள் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  மொத்தம் 73 வகையான பொருட்களுக்கு வரி வதிப்பு இல்லை
1% சதவிகித வரி
புல்லியன்ஸ் (ஆபரண பொருட்கள்), தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை,விலையுயர்ந்த கற்கள்,  கேன்டீன் விற்பனை துறை (CSD) ஆகியவற்றிற்கு 1 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களை கவர்வதற்கான நோக்கமாகும்.
4% சதவிகித வரி
மக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தி வரும்  பெரும்பாலான பொருட்களான காய்கறிகள் முதல் பல வகையான பொருட்களுக்கு 4 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, வெங்காயம், பூண்டு, இஞ்சி முதல் வண்டிகளின் டயர், டியூப்கள், வயர்கள், கேபிள்கள், நியூஸ் பிரின்ட், ஸ்டேஷனரி பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரெடிமேட், ஆயில் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற 350 பொருட்களுக்கு 4 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
12.5% சதவிகித வரி
மக்களின் அத்தியாவசிய பொருட்களான காபி பவுடர், காஸ்மெட்டிக்ஸ், ஏசி, பிரிட்ஜ், வாட்டர் கூலர், அலுமினியம், பித்தளை, வெண்கல பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள், பேக்கரி பொருட்கள், குழந்தைகளு க்கான டயாப்பர், சினிமா தொழில்களுக்கு தேவையான வீடியோ காமிரா, புரொஜெக்டர், பிலிம்,  எலக்ட்ரிக் பொருட்கள், எலக்டட்ரானிக் பொருட்களான டிவி, ஹெல்மெட், மருத்துவ உபகரணங்கள் உள்பட 172 பொருட்களுக்கு 12.5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
20% சதவிகித வரி
லாட்டரி டிக்கெட் மற்றும் மதுபானங்களுக்கு (உள்நாடு மற்றும் வெளிநாடு) 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
முழுமையான வரி விவர பட்டியல் (இணைப்பு)
வரி பற்றிய முழுமையான விவரம் அறிய இந்த linkஐ டவுன்லோடு செய்யுங்கள்