டில்லி:

ன்று முதல் புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலுக்கு வருவதால் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்பட  23 பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும்  கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒரே விதமான வரியை அமல்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து 5சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டன.

இதில் பல பொருட்களின் வரிகள் அதிகமாக இருப்பதாக புகார் கூறப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது சில பொருட்களின் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 22ந்தேதி நடைபெற்ற 31வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களின் வரி மாற்றி அமைக்கப்பட்டது.

சினிமா டிக்கெட், சரக்கு வாகனங்களின் மீதான காப்பீடு, டிவி, கம்ப்யூட்டர் மாணிட்டர்,  பவர் பேங்குகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், கேமராக்கள், கேமிங் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்பட 23 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.