டில்லி

ரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டிஜிட்டல் கேமிரா, வீடியோ கேமிரா, கியர் பாக்ஸ், டயர்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரு 28% லிருந்த் 18% ஆக குறைக்கப்படது. அத்ஹ்டுடன் வாகன மூன்றாம் நபர் காப்பீடு தொகை வரி 18%லிருந்து 12% ஆக குறைக்கப்பட்டது. திரைப்பட டிக்கட்டுகள், பவர் பேங்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது.

வரும் 10 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பொதுமக்களைக் கவர ஜிஎஸ்டி மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அத்துடன் சிமிண்ட் வரிக் குறைப்பும் ஆலோசனையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு தற்போது 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் குடிபுக தயாராக உள்ள நிலையில் விற்கப்படும் வீடுகள் உரிமையாளர் மற்றத்தின் கீழ் வருவதால் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது கிடையாது. எனவே கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு 12%லிருந்து 5% ஆக குறைக்க ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிய வந்துள்ளது.

தற்போது சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு 20 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வரை வருமானம் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.