தராபாத்

ட்லி தோசைமாவு, பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு உட்பட சுமார் 30 பொருட்களுக்கு ஜிஎஸ்டி  வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் நகரில் நடந்த 21 ஆவது ஜிஎஸ்டி கமிட்டி கூட்டம் ஐதராபாத் நகரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடை பெற்றது.   இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.   அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி எஸ் டி வரியை குறைக்க நிதி அமைச்சர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.  அதை விவாதத்துக்குப் பின் ஏற்றுக் கொண்டபின் வரிக் குறைப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில் இது குறித்து அருண்ஜெட்லி தெரிவித்ததாவது “

”இட்லி-தோசை மாவு, பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு, ரப்பர் பேண்ட், புண்ணாக்கு ஆகியவைகள் உட்பட 30 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படுகிறது.   பாதாம் பருப்புக்கு இது வரை இருந்த 12% ஜிஎஸ்டி தற்போது 5% ஆக குறைக்கப்படுகிறது.   காதிகிராஃப்ட் கடைகளில் விற்கப்படும் கதர் துணிகளுக்கு ஜிஎஸ்டி முழுமையாக விலக்கப்படுகிறது.    சிறிய கார்களுக்கு இனி கூடுதல் வரி கிடையாது.   கூடுதல் வரியாக நடுத்தர கார்களுக்கு 2%, பெரிய கார்களுக்கு 5%, சொகுசு கார்களுக்கு 7% என்னும் விகிதத்தில் விதிக்கப்படும்.  இதுவரை ஜிஎஸ்டியில் ரூ, 95 ஆயிரம் கோடி வசூல் ஆகி உள்ளது” என தெரிவித்தார்.

வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் களிமண் பொம்மைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க நிதி அமைச்சரும்,  பாதாம் பருப்புக்கு வரி விலக்கு அளித்ததற்கு ஜம்மு காஷ்மீர் மாநில நிதி அமைச்சரும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.