டெல்லி: மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்றத கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: நிதி நெருக்கடியை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்று கொள்ளலாம். மாநிலங்களுக்கு உதவ ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும்.
ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களே ஏற்றுக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.