பாஜக ஆதரவு சபையான ஜி எஸ் டி கவுன்சில்
“பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி, இந்த வருடத்தில் 4,00,000 கோடி ரூபாய்! இது ஒன்றிய பா. ஜ. க. அரசின்’ பேராசை வரி விதிப்பு ‘ என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!
“காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 150 டாலர்கள்! ஆனால், அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 65 ரூபாய்தான்! ஆனால் கடந்த ஆண்டுக்கு முன் ஒரு பீப்பாய் ‘ மைனஸ்’ சில் விற்ற போதும், தற்போது 85 டாலர்கள் விற்கும் போதும், மோடி அரசு அசுரத்தனமாக 100 ரூபாயைத் தாண்டி பெட்ரோல் விலை ஏற்றி மக்களிடம் கொள்ளை அடிக்கிறது!
இச்சூழலில், ‘ஜி. எஸ். டி. கவுன்சில்’ என்ற பொதுவான ஒரு அமைப்பை… தனது கட்சி (பா.ஜ.க.) ஆளும் மாநிலங்களின் ‘ஆதரவு சபை’ யாக நடத்துகிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
அந்தக் கவுன்சிலில் பங்கேற்கும் எதிர்க் கட்சிகளின் கருத்தையே அவர் கேட்பதில்லை!
ஏதேனும் அவர்கள் சொல்லும் போது, நிதி அமைச்சர் பதில் அளிக்காமல் எழுந்து சென்று விடுகிறார்!
எனவேதான், ஒன்றிய அரசின் எந்த முடிவும் தெரியாமல், : ஜி. எஸ். டி. க்குள் பெட்ரோல் உள்ளிட்ட எந்தப் பொருளையும் கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள்.. ” என்று ஒன்றிய அரசின் ‘ ஒவ்வாமை அரசியலை விமர்சிக்கிறார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!
– ஓவியர் இரா. பாரி