சென்னை: 2022ம் ஆண்டு மார்ச்சில் குரூப்1 முதன்மைத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடித்தும் குரூப்1 முதல்நிலை தேர்வு 03-01-2021ல் நடைபெற்றது. அதையடுத்து கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட லாக்டவுன் காரணமாக, தேர்வு முடிகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுதது, சமீபத்தில்  குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். வெளியிட்டது.

இதில், 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து எழுத்து தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  குருப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கான முதன்மை எழுத்து தேர்வு 2022ம் ஆண்டு  மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைகளை வரும் டிசம்பர் 22-ல் இருந்து ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் , tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்படியும்  டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது.