மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் மற்றும் மஜல்கோன் பகுதியில் குரங்குகள் ஒன்று சேர்ந்து 250 நாய்குட்டிகளை சாகடித்துள்ளது.
கடந்த மாதம் குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் கடித்து குதறியது, இதில் அந்த குரங்கு குட்டி இறந்துபோனது.
அதன் பின் குரங்குகள் அனைத்தும் ஒன்று கூடி இந்த கிராமத்தில் உள்ள நாய்குட்டிகளை கவ்விச் சென்று மிகவும் உயரமான கட்டிடங்கள் மற்றும் மரஉச்சியில் இருந்து தூக்கிப் போட்டு கொன்று விடுகின்றன.
தொடர்ச்சியாக ஒரு மாதத்தில் இதுவரை சுமார் 250 நாய்க்குட்டிகள் இதுபோல் இறந்துள்ள நிலையில் இப்போது குழந்தைகளை தூக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதால் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.
இதுவரை ஒரு குரங்கு கூட வனத்துறையினரிடம் சிக்கவில்லை என்று கூறும் இவ்வூர் மக்கள், 5000 பேர் வசிக்கும் இந்த ஊரில் தற்போது ஒரு நாய் குட்டி கூட மீஞ்சவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள்.