குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்து உள்ளார்.

கடந்த 8ந்தேதி அன்று குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட13 பேர் உயிரிழந்தனர். இதில், குரூப் கேப்டன் வருண் சிங் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இன்று குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண் , ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயத்துடன் மீட்க்கப்பட்ட வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
குரூப் கேப்டன் வருண் சிங் உடலில் 80 சதவிகிதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]