முகக்கவசம் அணியாததால் அதிகாரிகளுக்கு ‘மொய்’ எழுதிய மணமகன்..
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ,கொரோனா ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரே வாகனத்தில் 12 பேர் அமர்ந்தபடி சென்றதைப் பார்த்து அதிர்ந்தனர்.
வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, விசாரித்த போது அவர்கள் திருமண கோஷ்டியினர் என தெரியவந்தது.
மணமகன் தர்மேந்திராவும், அந்த வாகனத்தில் அமர்ந்து இருந்தார்.
வாகனத்தில் இருந்த யாரும், ( மணமகன் உட்பட) முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.
தனி நபர் இடைவெளியையும் கடைப் பிடிக்க வில்லை.
முககவசம் அணியாமல் இருந்ததால் ஆயிரம் ரூபாயும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத காரணத்தால் ஆயிரத்து 100 ரூபாயும் அபராதம் விதித்தனர், அதிகாரிகள்.
மொத்த பணத்தையும் ,மணமகன் தர்மேந்திரா ‘ஸ்பாட்டில்’ செலுத்தி விட்டு, தாலி கட்ட பறந்து சென்றார்.
அந்த மாநிலத்தில் கல்யாணத்துக்கே 12 பேர் மட்டுமே கூட வேண்டும் என்பது விதி. இந்த லட்சணத்தில் ஒரே காரில் 12 பேர் சென்றால் அதிகாரிகள் விடுவார்களா?
— பா. பாரதி