சென்னை: கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார்.
Grindr ஆப் (செயலி) மூலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே Grindr செயலி உள்படபல்வேறு செயலிகள் மற்றும் பிற டேட்டிங் தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய மாநிலஅரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இருந்தாலும் இதுபோன்ற முறையற்ற ஆப்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கிரிண்டர் ஆப் மூலம் நடைபெறும் மோசடி பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. இதுபோன்ற ஆப்களை உபயோகிப்போர்களை கண்டு, அவர்களை ஏதாவது ஒருவகையில், சிக்க வைத்து பணத்திற்காக மிரட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதுபோன்ற செயல்களை, பலர் வெளியாக சொல்லாத அவலம் உள்ளது. தற்போது இந்த மிரட்டல்கள் வீட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் மக்களைச் சந்தித்து அவர்களைத் துன்புறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
மேலும், போதை பொருள் கடத்தல் உள்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இதுபோன்ற ஆப்கள் உதவியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட போதை பொருள்கடத்தல் கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோன்ற ஆப்கள் மற்றும், நவீன முறைகளில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது வந்து தெரிய வந்தது.
மேலும், ‘கிரிண்டர்’ என்ற ஆப் மூலம் போதைப்பொருள் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதற்கு முன்பாகவே வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்த ஆப்பை தடை செய்வது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கிரிண்டர் செயலியை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் சார்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.