ஆந்திர ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் கமாண்டோ படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்த கமாண்டோ படை வீரர் அபுபக்கர் வீரமரணம் அடைந்தார். இன்னொரு சீனியர் வீரர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

abu

சண்டையில் படுகாயமடைந்த வீரர்கள் அபுபக்கரும் மற்றவரும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் மருத்துவர்கள் கடினமாக போராடியும் அபுபக்கரின் உயிரை காப்பாற்ற இயலவில்லை.
அபுபக்கர் விசாகபட்டிணம் அருகே உள்ள குஜுவாகா என்ற இடத்தை சேர்ந்தவர். கடந்த திங்களன்று மாவோயிஸ்டுகளுடன் நடந்த கடும் சண்டையில் 21 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.