ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த சில நாள்களாக வழக்கத்திற்கு மாறாக பனி பொழிந்து வருகிறது. தலைநகர் ஏதென்ஸின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பனியால் சாலைகள் முடங்கியுள்ளன.

ஏதென்ஸில் மைனஸ் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவாகும். அதன் காரணமாக கிரீஸில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பனிப்பொழிவு எதிரொலியாக 3 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.